இரசாயன உரப்பாவனை அதிகரிப்பு: மாவட்ட விவசாய பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனையால் மண் வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக மாவட்ட விவசாய பணிப்பாளரும் மேலதிக விவசாய ஆராட்சி பிரிவு பணிப்பாளருமான எஸ். ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விவசாய செய்கையின் போது இரசாயன உரப்பாவனை என்பது அதிகரித்தளவிலே காணப்படுகிறது.
போர் பதற்றங்களின் மத்தியில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி! வட கொரியா கடும் எச்சரிக்கை
இரசாயன உரப்பாவணை அதிகரிப்பு
இதனால் நல்ல வளமான மண் உவர்த்தன்மையடைந்து வருகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக விவசாய ஆராட்சி பணிப்பாளர் எஸ். ராஜேஸ்கண்ணா கருத்து தெரிவிக்கையில்,
விவசாயத்தில் அதிகரித்து வருகின்ற இரசாயன உரப்பாவணை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விவசாயிகள் மட்டத்தில் விழிப்புணர்வு மிக மிக அவசியமாகும்.

அந்த வகையில் விவசாயிகள் சேதன உரங்களை படிப்படியாக பாவிக்க வேண்டும். தற்போது மாவட்டத்திலே கெக்ரேயர் ஒன்றுக்கு 5.6 தொன் உற்பத்தி அளவிலான உற்பத்தியே அதிகரித்த உற்பத்தியாக கிடைக்கப் பெறுகின்றது.
மனிதர்களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பங்கஸ் நாசினி மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
அத்துடன், கழிவு வாய்க்கால்கள் துப்புரவு செய்யப்படாமையினால் வயல் நிலங்களின் ஊடாகவும் வெள்ள நீர் பாய்வதால் களைநெல் மற்றும் பன்றி நெல் போன்றனவும் நெல் பயிருக்கு கேடு விளைவிக்கும் இவ்வாறான பயிர்களும் அதிகளவில் பரவி வருகின்றன.
அத்துடன், ஆகாயத்தாமரை சல்பீனியா போன்ற நீர் தாவரங்களும் இவ்வாறு பரவலடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam