இலங்கையில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு-தென் கிழக்காசிய நாடுகளில் 6வது இடம்
தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த எட்டு நாடுகளில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் நடக்கும் 6வது நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸூடன் சம்பந்தப்பட்ட என்ஆக்ட் (Enact) அமைப்பின் புதிய அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்கள் 4.64 வீதமாக அதிகரிப்பு
இந்த அறிக்கைக்கு அமைய இலங்கையில் குற்றச் செயல்களின் சுட்டெண் 4.64 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கையில் 30 பாதாள உலகக்குழுக்கள் இருக்கின்றன.
இந்த பாதாள உலகக்குழுக்கள் கொழும்பு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, வடகொழும்பு, நுகேகொடை ஆகிய பிரதேசங்களில் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் அண்மைய காலங்களில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நடந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் போதைப் பொருள் கடத்தல், வாள் வெட்டு சம்பவங்கள் என்பனவும் அதிகளலில் நடந்து வருவதை காணக்கூடிய உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
