எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து கட்டணம்
எரிபொருள் விலையில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய விலை திருத்தம் தமது தொழிற்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்தமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.