யாழில் தனியார் பேருந்துகளால் நிகழும் அசௌகரியம்
யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன நெரிசல் ஏற்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நிலைய வீதியிலிருந்து பயணிகளை ஏற்றி சேவையை ஆரம்பிக்கும் குறித்த தனியார் பேருந்துகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து மேலும் அதிகளவானவர்களை ஏற்றுவதற்கும் நேரத்தினை நகர்த்துவதற்காகம் வைத்தியசாலை வீதியில் பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக நீண்ட நேரம் நடுவீதியில் நிறுத்தப்படுகின்றது என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
அருகிலேயே பொலிஸ் பரிசோதனை சாவடி
பேருந்து நிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் காணப்படுகின்ற நகரின் மத்திய பகுதியில் இவ்வாறு பொறுப்பின்றி சரதிகள் நடந்து கொள்ளவதால் ஒருவழிப்பாதையான இப்பாதையில் பின்னால் வரும் வாகனங்கள் செல்லமுடியாது காத்திருந்தே பயணிக்க வேண்டியுள்ளது.
குறித்த இடத்தின் மிக அருகிலேயே பொலிஸ் பரிசோதனை சாவடி காணப்படுகின்ற போதும் பொலிஸாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri