வருமான வரி அறவீடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர் அல்லது தொழில் மூலம் சம்பளம் பெறுவோர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த வேண்டியது மக்களின் கடப்பாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் உரிய தொகை வருமான வரியை செலுத்துமாறு தேசிய இறைவரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இணைய வழியிலோ அல்லது இறைவரித் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் அல்லது கிளை காரியாலயங்கள் ஊடாகவும் வரி செலுத்துகை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam