தொடரும் சீரற்ற காலநிலை: சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் இந்த வீதிகளில் செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
மகிழுந்து விபத்து
குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் - கொட்டகலை வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மகிழுந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்றும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் மகிழுந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam