யாழ். வல்லைவெளியில் தொடரும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லைவெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு வல்லைவெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணின் 5 பவுண் தங்க நகை நேற்றுமுன் தினம் (16.05.2022) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதனால் வயோதிப பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வார கால பகுதிக்குள் ஐந்திற்கும் மேற்பட்ட வழிப்பறி
குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை குறித்த பகுதியில் வழி மறித்த வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர்களிடம் இருந்து 11 பவுண் நகை மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
இதேவேளை வேலை முடித்து வீடு பெண்ணொருவரின் தங்க சங்கிலி ஒன்றும் வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மோட்டார்சைக்கிளில் பயணித்த மற்றுமோர் பெண்ணின் சங்கிலியை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
அதேவேளை குறித்த வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் வல்வெட்டித்துறை பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வடமராட்சியில் பகுதியில் வழிப்பறி கொள்ளை
வடமராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றத்தில் கடந்த 14ஆம் திகதி 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள், தொலைபேசிகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவன கொள்ளையிடப்பட்டுள்ளன.

வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தபோது மறுநாள் குறித்த சந்தேகநபர் பொலிஸ் நிலைய மலசல கூட ஜன்னல் வழியாக தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி சென்ற நபரும், அவரது கும்பலை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam