யாழில் ஜனாதிபதி ரணிலின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு..!
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் "இயலும் ஸ்ரீலங்கா" யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (31.08,2024) காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழாவானது யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேர்தல் நடவடிக்கைகள்
இந்த அலுவலகமானது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி தாவடியில் செயற்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் 11 தேர்தல் தொகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது.
நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |