பல்துறை வல்லோன் கலாநிதி கலாமணியின் உருவச்சிலை திறப்பு
பல்துறை வல்லோன் கலாநிதி - கலாமணியின் உருவச்சிலை திறப்பும், பல்கலைக்கழகமாக கலாநிதி கலாமணி எனும் நினைவு மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (12.03.2024) காலை10:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பௌநந்தி தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக கலாநிதி - கலாமணியின் உருவப்படத்திற்கான மலர் மாலையை அவரின் பிள்ளைகள் ஆகியோர் அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
நூல் வெளியீட்டு நிகழ்வு
இதனை தொடர்ந்து கலாநிதி கலாமணியினுடைய உருவச்சிலையை ஓய்வு நிலை தமிழ் துறை பேராசிரியர் திரை நீக்கம் செய்து வைத்து கல்வெட்டையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.
மேலும், கலாநிதி - கலாமணி எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றதுடன் அவரின் சனைவுரைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் நிகழ்த்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் , மாணவர்கள் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.