யாழில். நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
யாழ்ப்பாணம் - கட்டுவான் பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரினால் இன்று(8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவான் பகுதிகளில் அண்மைக்காலமாக நீர் இறைக்கும் மின் மோட்டார்கள், நீர் பம்பிகள் திருடப்பட்டு வந்த நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதற்கமைய விசாரணைகளின் மூலம் நான்கு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான 7 நீர் இறைக்கும் மின் மோட்டார்களை மீட்கப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
