ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: அரசியல் மேடையில் ரணில் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
காலி மாநகர சபை மைதானத்தில் இன்று (27) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான இலங்கை
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும், அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியுமென யாராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைச் சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதா உல்லா மற்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி ஆகியோரும் இந்த பொதுக்கூட்ட மேடையில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
