'கருப்பு ஞாயிறு' அனுஷ்டிப்பில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு
இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள'கருப்பு ஞாயிறு' தின அனுஷ்டிப்பில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்றுள்ளன.
இதனடிப்படையில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இன்று பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் விசேட திருப்பலி நடத்தப்பட்டுள்ளது.
இதில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்டளவான கத்தோலிக்க மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
