வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள கோவிட்டால் உயிரிழந்தவரின் சடலம்
பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 18 நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 29ஆம் திகதி 71 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலமே இவ்வாறு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஒட்டோபர் மாதம் 9ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கடந்த 5 மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலத்திற்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களிடம் அறிவித்த போதிலும் இதுவரையில் ஒருவரும் வருகைத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam