நாட்டில் கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் நான்கு கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்வடைந்துள்ளது.
1. பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று, அதிர்ச்சி மற்றும் சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த் தொற்று மற்றும் சிறுநீரக நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர், தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் கடுமையான மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam