ஈழத்தின் பாடகர் சாந்தனின் 7ஆம் ஆண்டு நினைவாக நடத்தப்பட்ட பாடல் போட்டி
ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் அமரர் S.G சாந்தனின் 7ஆம் ஆண்டு நினைவாக நடத்தப்பட்ட காலக்குரல் பாடல்போட்டியின் இறுதிப்போட்டியின் வெற்றியலாளராக இசையரசி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இறுதிப்போட்டி நேற்றையதினம் யாழில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றது.
இதன்போது இறுதிப்போட்டியில் 5 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் முதலாம் இடத்தை இசையரசியும், இரண்டாம் இடத்தை ஜனூதாசும் மூன்றாம் இடத்தை கோகுலனும் பெற்றுக்கொண்டனர்.
முதலாம் இடம்
இந்நிலையில், முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட போட்டியாளருக்கு வெற்றிக்கேடயத்தை ஐபிசி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் வழங்கிவைத்திருந்தார்.
மேலும், குறித்த நிகழ்வில் இலங்கையின் இசைத்துறை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பாடகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐபிசி லங்காசிறி குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன்,
ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் அமரர் எஸ்.ஜி சாந்தனின் பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இசைத்திறமைக்கான அங்கீகார களம்
எஸ்.ஜி சாந்தனின் பாடல்கள் ஈழப்போரின் காலத்தில் தமிழினத்தின்பாலும், தமிழதேசியத்தின்பாலும் எம்மவர்களை ஈர்க்கப்பட்டு இன்றுவரை எங்களுக்குள்ளே உரமாக இருக்கின்றது.
இதன் காரணத்தினால் இன்னமும் அநேகமானோர் தாயக பற்றோடு வாழ்கின்றோம்.
அத்தோடு இந்த நிகழ்ச்சியினை பார்க்கின்றபோது நமது மக்கள் மத்தியில் காணப்படும் இசைத்திறமைக்கான அங்கீகார களமாக அமைகிறது.
மேலும், யாழ். மண்ணில் நடைபெறும் இவ்வாறான இசைநிகழ்ச்சிகளை அங்கீகரிக்க மக்கள் முன்வராமை கலவைக்குரியதாய் அமைகிறது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |