பொத்துவில் நீதிமன்றம் அரியநேத்திரனுக்கு அழைப்பானை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிராக பொத்துவில் பொலிஸார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக பொத்துவில் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9, மணிக்கு பொத்துவில் நீதிமன்றில் சமூகம் தருமாறு இன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், பொத்துவில் பொலிஸாரும் அரியநேத்திரனின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்ற கட்டளையைக் கையளித்தனர்.
இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைக் கடந்த ஏப்ரல் மாதம் கல்முனையில் தாக்கல் செய்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முற்றாக இடைநிறுத்தி கல்முனை நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கு கல்முனை நீதவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற தடையுத்தரவினை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து கட்டளை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு மீளப்பெறப்படுமா என நீதவான் மனுதாரர்களான பொலிஸாரிடம் இதன்போது வினவியிருந்தார்.
எனினும், உயர்மட்டத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என மனுதாரர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பத்து மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றிலிருந்து அரியநேத்திரனுக்கு அழைப்பானை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
