பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 133 பேர் கொரோனாவிற்கு பலி!
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,406 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 133 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வாரத்தில் பிரித்தானியாவில் கோவிட் மரணம் 27 வீதத்தினால் உயர்ந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக 11 நாளாகவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 38,046 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியிருந்ததுடன், 100 பேர் நோய் தொற்றினால் உயிரிழந்தனர். பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 6,698,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 132,376 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,228,191 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 982 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 5,337,919 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதத்துடன், ஒப்பிடும் போது பிரித்தானியாவில் கோவிட் மரணங்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.