மட்டக்களப்பு - அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு இல்லை
கறுப்பு ஞாயிறு தினமானது மட்டக்களப்பு அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை வழமை போல தேவாலயங்களில் திருப்பலி பூஜைகள் இடம்பெற்றுள்ளதுடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கறுப்பு ஞாயிறு’ தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இன்று கறுப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.
அதேவேளை குறித்த தேவாலயங்களில் வழமைபோல திருப்பலி பூஜைகள் இடம்பெற்றுள்ளதுடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பினையும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை தமக்கு ஆலய பங்கு தந்தையான வண பிதாக்களோ அல்லது மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆண்டகையே இது தொடர்பாக அறிவிக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
