கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!மூன்று மாடுகள் பலி
கிளிநொச்சி- பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை ,விபத்து சம்பவத்தில் சிக்கி மூன்று மாடுகள் பலியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார், யாழ்ப்பாண பிரதான வீதியின் 4ம் கட்டை தெளிகரை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் தரித்திருந்த மாடுகளுடன் மோதிய வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் சிக்கிய வாகனம் கடுமையாகச் சேதமடைந்ததுடன், வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீன் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam