இளைஞர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்-இம்தியாஸ் பாக்கீர் தனிநபர் பிரேரணை
தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களில் 25% இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் தனிநபர் பிரேரணை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுப்பட்டியலில் 25% இளைஞர்களுக்கு ஒதுக்குவது கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் தனிநபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த தனிநபர் பிரேரணை உத்தேச சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அறிவித்தல் 27 மே 2022 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் மாகாண சபைகள், உள்ளூராட்சி, அரசாங்க மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தனிநபர்களாகக் கருதப்படுவர்
நாடாமன்றம், மாகாணசபைகள் அல்லது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் போது ஒவ்வொரு வாக்காளர் தொகுதியிலிருந்தும் 25% இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டிருக்க வேண்டும் என்று இந்த மசோதா கோருகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி இளைஞர்கள் 35 வயதுக்குட்பட்ட தனிநபர்களாகக் கருதப்படுவார்கள். சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னரே இது வரைவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மசோதா தாக்கல்
சட்டவாக்கத்தில் இளைஞர்களின் குரலுக்கு இடம் அளிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் 15-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
இருப்பினும், இது எங்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பிரதிபலிக்கவில்லை. எங்களிடம் போதுமான இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அமைப்பில் இல்லை, அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் ஏனையோரினால் எடுக்கப்படுகின்றன.
இதற்கு உடனடி திருத்தம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு ஜூன் மாதம் 21 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.