துறைமுக நகரானது ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல - இம்ரான்
துறைமுக நகர், ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்களும், அண்ணளவாக முப்பது மரணங்களும் பதிவாகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அவசர அவசரமாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது.
அதனால் கடந்த வாரம் முடக்கப்பட்ட நாட்டை இந்த வாரம் திறந்து அடுத்த வாரம் மீண்டும் முடக்கவுள்ளனர்.
தேசிய சொத்துக்களை பாதுகாப்போம் என 69 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்ட அரசாங்கம் இச்சட்டமூலம் ஊடாக துறைமுக நகரத்தை சீனாவுக்கு அடகு வைக்க முயற்சிக்கிறது.
அவர்கள் நினைத்தது போல் இதை வழங்க துறைமுக நகர் ராஜபக்ஸ குடும்பத்தின் சொத்தல்ல.
இது இந்நாட்டு மக்களின் சொத்து. இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்நகரின் பயனை எமது பிள்ளைகள் மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் துறைமுக நகரத்துக்கு எதிர்ப்பல்ல. அந்த அபிவிருத்தியை நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் இந்த சட்டமூலத்தில் சில சரத்துக்களுக்கே நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.
இச்சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவ்வாறு வாகஎடுப்பு நடத்தப்படுமானால் அது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் மக்களுக்கு யார் தேச பற்றாளர்கள் யார் தேச
துரோகிகள் என தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
