பாகிஸ்தானில் பதற்றம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! சமூக வலைத்தளங்கள் முடக்கம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளமையினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை இராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வன்முறை ஏற்படும் சூழலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
