கிளிநொச்சியில் நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்தும் நிகழ்வு
தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50,000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி - புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் இன்று (3.12.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
நன்னீர் மீன் உற்பத்தி
உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்ததான மீன் குஞ்சுகளை வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 19.11.2023 ம் திகதி ஆரம்பமானது.
இத்திட்டத்தின் கீழ் புதுமுறிப்பு மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு 150, 000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. அதற்கு மேலதிகமாக இன்றைய தினம் மேலும் 50000 மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
குறித்த நிகழ்வில் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காசா மீது மீண்டும் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: நூற்றுக்கணக்கில் பலியான மக்கள் - நிராகரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
