தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்த வழக்கு! - மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை

Australia Tamil Nadu Court
By Murali Jul 21, 2021 11:39 PM GMT
Report

சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் கந்தசாமி கண்ணன் மற்றும் குமிதினி கண்ணன் தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார்.

இதன்படி குமிதினி கண்ணனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கந்தசாமி கண்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குமிதினி (53 வயது) ஆகக்குறைந்தது 4 ஆண்டுகளை சிறையில் கழித்தபின்னர் பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும்கண்ணன் (57 வயது) ஆகக்குறைந்தது 3 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டுமெனவும் இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இத்தம்பதியர் உரியமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டதாகவும், இவர்களது நடவடிக்கை மனிதாபிமானமற்ற முறையில் அமைந்திருந்ததாகவும் நீதிபதி John Champion தெரிவித்தார்.

எனினும் இத்தீர்ப்பிற்கெதிராக இவர்கள் இருவரும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

வழக்கின் பின்னணி

மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த தமிழ்ப்பெண், ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் வேலைசெய்ய தயாரான நிலையில் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதிகரித்த வேலைப்பளு காரணமாக இரவில் ஒரு மணிநேரம் மாத்திரமே நன்றாக உறங்கக்கூடிய சூழலில் அவர் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறுவர் பராமரிப்பு, துப்பரவுப் பணி, சமையல், துணி துவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளுக்குமான ஊதியமாக நாளொன்றுக்கு 3.39 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், வீட்டுக் கதவைத் திறப்பதென்றால்கூட தம்பதியரின் அனுமதிபெற்றுத்தான் திறக்கமுடியும் எனவும், குறித்த பெண் சார்பில் வாதாடிய Richard Maidment தெரிவித்தார்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இப்பெண் கல்வியறிவு அற்றவர் எனவும், 14 வயதில் திருமணம் செய்து 29 வயதில் பாட்டியாகிவிட்டதாகவும், தனது குடும்பத்திற்கு பண உதவி செய்வதற்காகவே குறித்த தம்பதியருடன் அவுஸ்திரேலியா வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு தடவைகள் அவுஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டபோதிலும் இப்பெண்ணை குறித்த தம்பதியர் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பன் தம்பதியர்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுவர் பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை செய்வதற்கு பணச்செலவின்றி ஒருவரை தங்கவைத்துக்கொண்டு தமது வசதியான வாழ்க்கையைத் தொடர்வதே இத்தம்பதியரின் நோக்கம் என குறித்த பெண் சார்பில் முன்னிலையான வழக்குரைஞர் Richard Maidment தெரிவித்தார்.

ஆனால் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் முழுவிருப்பத்துடனேயே அவர் தம்முடன் தங்கியிருந்ததாகவும், இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என்றும் மெல்பன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்துவந்தனர்.

வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் 'அடிமை' என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும், இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US