பிரித்தானியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மாணவன்!
பிரித்தானியாவில் மாணவியொருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டிற்காக மாணவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்ஹொங்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 22 வயதுடைய சாஹல் எனும் மாணவருக்கே இவ்வாறு 4 மாத சிறைத்தண்டனையும், கல்லூரியில் இருந்து 2 ஆண்டுகள் இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளதுடன்,மேலும் ஐந்தாண்டு தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் பிரித்தானியாவில் Oxford Brookes பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில்,செவிலியர் மாணவியொருவருக்கு 100 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், ஆன்லைனில் கிடைத்த கவிதைகளைக் கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு கடந்த வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாணவியை பின் தொடர்ந்து அச்சுறுத்தியதற்காக தனது குற்றத்தை குறித்த மாணவன் ஒப்புக்கொண்ட நிலையில்,பெண் மாணவியை அச்சுறுத்தியமைக்காக 4 மாத சிறைத்தண்டனையும், 2 ஆண்டுகள் இடைநீக்கமும்,மேலும் ஐந்தாண்டு தடை உத்தரவும் விதிக்கப்பட்டு நீதிபதி நைகல் டேலி ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்தும், அவரது பட்டப்படிப்பில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.