கடந்த 8 மாதங்களில் வெகுவாக குறைந்த வாகனங்களின் இறக்குமதி
வாகனங்களை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டதை அடுத்து கடந்த 8 மாத காலத்திற்குள் இரண்டு கார்கள் மற்றும் 27 பேருந்துகள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 227 மோட்டர்சைக்கிள்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 100 வீதம் குறைவான இறக்குமதி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 106 கார்கள், 3309 பேருந்துகள் மற்றும் 21203 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
2019ஆம் ஆண்டு 1060 முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிகள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை.
அத்துடன் விவசாயம் சம்பந்தப்பட்ட வாகனங்களின் இறக்குமதி 52 வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட 354 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு 233 வாகனங்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. மோட்டார் வாகன இறக்குமதியின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு 81.5 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
இந்த தொகை கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 43.1 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளதாகவும் நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam