லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகை
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளை நிறுவனங்களில் சலுகை மூலம் 35 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விலை மாற்றத்தின் அடிப்படையில் நேற்று(21) முதல் முட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர் ஒருவருக்கு முப்பது முட்டை வீதம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவிக்கையில்,
தர நிர்ணயம்
ஏற்கனவே 10 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் முட்டைகள், தர நிர்ணயத்திற்காக அனுப்பப்பட்டு தற்போது சந்தைக்கு விடப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
