மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வீதிகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிள் பயனளார்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருடப்படும் மோட்டார் சைக்கிளின் இயந்திர இலக்கங்கள் மற்றும் சேஸி இலக்கங்களை மாற்றி போலி இலக்கத் தகடுகளை பொருத்தி வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் படல்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் மற்றும் பேஸ்புக் விளம்பரங்களை வெளியிட்டு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தங்கொட்டுவ - மொரக்குளிய பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த 6 மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளாக இருந்தாலும் நியாயம் வேண்டும்! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam