வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனவுகளின் உலகத்தை உருவாக்குவதாக கூறி மக்களை ஏமாற்றும் மோசடியாளர்களிடம் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்ள வேண்டாம் என பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை
வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது, எனவே அவர்கள் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசா
இதனால் சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
