பிரான்ஸில் இலங்கை தமிழ் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிஸின் புறநகர் பகுதியிலுள்ள நகர சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரசபையில் நேற்று முன்தினம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்றி-சூர்-சென் நகரசபை முதல்வர், நகரசபை பிரதி முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது
குறித்த தீர்மானத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டதாகவும், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் எனவும், இவை போன்ற பல்வேறு விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வின் போது இலங்கை இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பரிஸில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது, இவ்றி-சூர்- சென், தமிழ் சங்கங்கள், இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் தலைவிதி பற்றி சுட்டிக்காட்டியுள்ளன.
போரின் போது தமிழ் மக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தமை தெரியவந்துள்ளது. மேலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
