சுரேஷ் சாலே வழக்கில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு..!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலேவின் அறிக்கை சமர்ப்பணம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு, இன்று(04.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே விசேட மருத்துவ நிபுணர் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்கான அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி சட்டமா அதிபர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் சாலே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பெரீஸ் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan