கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
களனி ரஜமகா விஹாரையின் பெரஹெரா ஊர்வலம் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று புதன்கிழமை (07) ஊர்வலம் களனி ரஜமகா விஹாரையில் இருந்து ஆரம்பமாகி செல்லவுள்ளது.
ஊர்வலம் செல்லும் முறை
இதற்கமைய, இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பெரஹெரா ஊர்வலத்தின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

களனி ரஜமகா விஹாரையில் இருந்து ஆரம்பமாகி, களனி சிரிவட்ட சுற்றுவட்டம், பேலியகொடை வீதி வழியாகச் சென்று, கோனகம்பொல வீதியிலுள்ள பிலபிட்டிய மயானம் வழியாகச் சென்று, போதிருக்கராமய விஹாரைக்கு அருகில் உள்ள வரகொட வீதியில் நுழைந்து, நுங்கமுகொட ஹனடிய, கல்பொரளை, வாலங்காடை சந்திக்குள் நுழைந்து, விஹார மாவத்தை வழியாக பியகம வீதிக்குள் நுழைந்து நவலோக வஹல்கட வழியாகச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிகள்
பத்தரமுல்லயிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞைகளில் வலதுபுறம் திரும்பி, கடுவளை வழியாக அம்பத்தலே வீதி வழியாக பியகம நோக்கிச் செல்லலாம்.
பத்தரமுல்லையிலிருந்து பேலியகொடை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞைகளில் இடதுபுறம் திரும்பி தொட்டலங்க வீதி வழியாக பேலியகொடை நோக்கிச் செல்லலாம்.
பியகமவிலிருந்து பேலியகொடை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பட்டிவில சந்தியில் வலதுபுறம் திரும்பி சப்புகஸ்கந்த - கிரிபத்கொடை வழியாகச் செல்லலாம்.

பியகமவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பண்டாரவத்த சந்தியில் இடதுபுறம் திரும்பி கடுவளை அம்பத்தலே வீதி வழியாகச் செல்லலாம்.
பேலியகொடையிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பேலியகொடை சந்தியில் திரும்பி கிரிபத்கொட சப்புகஸ்கந்த வீதி வழியாகச் செல்லலாம் பேலியகொடவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தொட்டலங்க வீதியில் களனிமுல்ல போக்குவரத்து சமிக்ஞை வழியாக பத்தரமுல்ல நோக்கிச் செல்லலாம்.
வரகொடவிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய கண்டி வீதி டயர் சந்திப்பு, கிரிபத்கொட, சப்புகஸ்கந்த வழியாகச் செல்லலாம்.
பழைய கண்டி வீதியில் பியகம நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கிரிபத்கொட, சப்புகஸ்கந்த மற்றும் பட்டிவில வீதி வழியாக செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri