நுணாவில் லங்கா ஐ.ஓ.சியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
யாழ்.தென்மராட்சி நுணாவில் லங்கா ஐ.ஓ.சியில் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் QR Code அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளதாக நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதற்கமைவாக, தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள J/288 முதல் J/302 வரையான கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் நாளை 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் எரிபொருள் விநியோகம்
இதற்கமைவாக 6,7,8,9 ஆகிய வாகன பின்னிலகங்களுக்கு நாளைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்துவதற்காக குடும்ப அட்டை அல்லது எரிபொருள் நிரப்பு அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய,ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும், மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனையவர்கள் வருகை தந்து ஏமாற்றம் அடைவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.