சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கண்டித்தும், அரசாங்கத்திற்கு எதிராகவும் இலங்கையில் பல பகுதிகளில் மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லங்கள், அமைச்சர்களின் இல்லங்கள் மக்களால் முற்றுகையிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.