இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு
நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் சேவைக்காக திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்த 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,