PCR Report எப்படி எடுப்பதென தெரியாத பலரின் பிரயாணம் தடை! விமானசீட்டு பணமும் வீண்விரயம்... (Video)

Covid 19 Sri lanka World PCR
By Benat Dec 25, 2021 04:53 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக காணப்படும் கோவிட் தொற்றினால் நாடுகள், மக்கள், நாடுகளின் பொருளாதாரங்கள், சுகாதாரத்துறை போன்றன கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கியிருக்கின்றன.

 அத்துடன், தங்களது நாட்டுக்கு கல்வி நிமித்தம், தொழில் நிமித்தம், பல்வேறு காரணங்களுக்காக வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் ஒவ்வொரு நாடும் பல்வேறு கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.

தமது நாட்டிற்கு வரும் பயணிகள் செலுத்தியிருக்க வேண்டிய தடுப்பூசி, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கோவிட் தொற்றுடன் தொடர்புடைய சுகாதார படிவங்கள் போன்றவற்றை பல நாடுகள் கட்டாயமாக்கியிருக்கின்றன.


இந்த நிலையில், இலங்கையில் இருந்து ஒருவர் வெளிநாடு செல்வாராயின் அவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையில் இருந்து ஒருவர் வெளிநாடு செல்வாராயின் அவர் செல்லும் நாட்டைப் பொறுத்து அவர் செய்யவேண்டிய பரிசோதனைகள் அமையப்பெறும்.

குறிப்பாக, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்பவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் அந்த அந்த நாடுகளால் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் ஒருவர் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் தங்களது இலகு சேவையினை வழங்கக் காத்திருக்கின்றன.

அதன்படி, இலங்கையில் இருக்கக் கூடிய லங்கா ஹொஸ்பிடல்ஸ், ஹேமாஸ் ஹொஸ்பிடல்ஸ், டர்டன்ஸ், ரோயல் ஹொஸ்பிட்டலஸ் போன்ற வைத்தியசாலைகள் பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான இலகு வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில்,

ரோயல் ஹொஸ்பிட்டல்ஸ்

நேரம் - 24 மணித்தியாலங்களுக்குள் உங்களுக்கான பிசிஆர் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். மிக விரைவாக வேண்டும் என்றால் அதற்குரிய காரணங்களோடு பிசிஆர் பரிசோதனைக்குரிய மாதிரிகளை விரைவாக வழங்குவீர்கள் என்றால் 12 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சில சமயங்களில் பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த அறிக்கை கிடைப்பதற்கு தாமதமாகும், எதிர்மறை முடிவுகள் கிடைத்தால் அதற்கான பரிசோதனை விரைவாக உங்களுக்கு கிடைக்கும்.

கட்டணம் - கட்டணம் தொடர்பான விபரங்களை ரோயல்ஸ் வைத்தியசாலையின் தொடர்பிலகத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்களுடைய தேவைகளைப் பொறுத்து பெற்றுக் கொள்ள முடியும்.


டேர்டன்ஸ் ஹொஸ்பிட்டல்ஸ்

நேரம் - 12 மணித்தியாலங்களுக்குள் பிசிஆர் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். அவசர தேவைகள் ஏற்படுமிடத்து பயணிகள் கோரிக்கை விடுப்பாராயின் 12 இல் இருந்து 10 மணித்தியாலங்களுக்கு பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும்.

வழமையாக காலை நேரம் 07.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரைக்குள் எடுக்க முடியும். அவசர காரணங்கள் இருப்பின் வெளியில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் மாலை 6.00 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிசோதனை செய்யப்படும்.

கட்டணம் - பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணமாக 6,500 ரூபா பெற்றுக் கொள்ளப் படுகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைவருக்குமே ஒரே கட்டணமாக 6,500 ரூபாவே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

பரிசோதனை அறிக்கை - இங்கிருந்து வெளிநாடு செல்லும் பயணியின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதாக பரிசோதனை அறிக்கை அமையும். இதன்போது க்யூ ஆர் குறியீட்டோடு, பயணிகளின் கோரிக்கைளுக்கு ஏற்ப உண்மையான தகவல்களை உள்ளடக்கி இலகுவான பரிசோதனை அறிக்கைக் கிடைக்கப் பெறும்.

மேலதிக தகவல் - வெளிநாடு செல்பவர்கள் அல்லாமல் வைத்தியசாலைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.


லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்

நேரம் - 24 மணித்தியாலத்திற்கு பரிசோதனை அறிக்கைப் பெற்றுக் கொள்ள முடியும், அத்துடன் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும்.

கட்டணம் - 6500 ரூபா


நவலோக ஹொஸ்பிட்டல்ஸ்

நேரம் - 24 மணித்தியாலத்திற்குள் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும். மிக அவசரத் தேவைகள் இருப்பின் காரணங்களோடு கோரிக்கை முன்வைத்தால் 12 மணித்தியாலங்களில் இருந்து 20 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையான காரணங்களை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

கட்டணம் - ஒரு நபருக்கு 6,500 அறவிடப்படுகின்றது.

மேலதிக தகவல்கள் - காலையில் 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை மட்டுமே பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படும்.

நீங்கள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்வதற்கு முதல்நாள் வைத்தியசாலையில் வட்ஸப் இலக்கத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பிசிஆர் என்று பதிவு செய்து 011 5777 777 என்ற இலக்கத்திற்கு வட்ஸ் அப் செய்வதன் ஊடாக உங்களது மேலதிக விபரங்களைப் பெற்று உங்களது தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்து தருவதற்கு வைத்தியாசாலை தரப்பு தயாராகவிருக்கின்றது.             


தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் இருந்து உயர்கல்விக்காகவும், தொழிலின் நிமித்தமும் இலங்கை வாழ் தமிழர்கள் அண்டைய நாடுகளை நோக்கி செல்வது சாதாரண விடயாகிவிட்டது.  அத்துடன், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் வெளிநாடுகளை நோக்கிச் செல்லும் போது அவர்களுக்குரிய பரிசோதனைகள் குறித்து அறிந்திருப்பது மிக மிக அவசியம்.

இந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் உங்களுக்கான இலகு சேவையினையும், விரைவாகவும் வழங்குகின்றன. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US