வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இலங்கையில் அந்த தடுப்பூசியைப் பெற முடியாது என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது கோவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி தேவைப்படுமாயின், வெளிநாடு சென்ற பின்னர் உரிய நாட்டின் நடைமுறைகளுக்கு அமைய பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.