இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) நிர்வாகம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இதன்போது இடைக்காலக் குழுவொன்று அல்லது அதிகாரப்பூர்வ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று(05.03.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், இக்கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினார்.
கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்த திட்டம்
அத்துடன் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தவும், வெற்றிகளை ஈட்டவும் நாங்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம். அந்தத் திட்டத்தின் சில பகுதிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டைத் தடை செய்ய வேண்டிய அவசியம் எமக்கில்லை. விளையாட்டைத் தக்கவைத்துக்கொண்டு அதனை மேம்படுத்த வேண்டும். தேவையான மாற்றங்களைச் செய்ய நாங்கள் கண்டிப்பாகத் தலையிடுவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan