மகளிர் மற்றும் சிறுவர் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்
மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றினால் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான நிறுவனப் பராமரிப்பு மற்றும் பாதுகாவலர் உரிமை, தெருவோரச் சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம், முன்பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவை வெறும் மற்றொரு பண உதவித் திட்டமாக அன்றி, அதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கமான கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, உரிய மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், 'டித்வா' சூறாவளியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்தக் கொடுப்பனவை உரிய சிறுவர்களுக்கு விரைவாக வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.






ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 12 நிமிடங்கள் முன்
ரிலீஸுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam