அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் போதியளவு சந்தையில் கிடைக்கக்கூடிய வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நுகர்வோருக்கு எதுவித தடங்கலும் இல்லாமல் பொருட்களை விநியோகிக்ககூடிய வகையில் சந்தை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் முறைப்பாடு

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
இதேவேளை அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri