கொரிய வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வேலை வாய்ப்பிற்காக உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றவர்கள் நாட்டிற்குள் உள்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீ சூ சுல் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல்
அதற்கமைய, அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் 200 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரிய தொழில் வாய்ப்புகளில் அதிகமானவற்றை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்த கோரிக்கையும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam