பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்! முறையிடுவதற்கு புதிய இலக்கம் அறிமுகம்
போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகாண பேருந்து ஊழியர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை அளிக்க புதிய இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 071-2595555 என்ற புதிய இலக்கம் ஒன்றை போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த இலக்கத்திற்கு காணொளி பதிவுகளையும் அனுப்பி வைக்க முடியும்.
சமூக வலைத்தளங்களான வட்ஸ் அப், வைபர் மற்றும் இமோ மூலம் அந்த எண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மாகாண பேருந்து ஊழியர்களுக்கு எதிராக காட்சிகளை பதிவு செய்து அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளரும் பேராசிரியருமான திலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தொடர்பு இலக்க எண் 1955 தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாகவும் 071-2595555 எனும் புதிய எண் பொது மக்களுக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam