முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு அனர்த்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
தண்ணிமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய (09.12.2025, P.M 9.00) மழை நிலையை கருத்திற் கொண்டு வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் வயல்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக அவசரமான அறிவிப்பு எனவும் தயவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிக மழை
அதேவேளை, முல்லைத்தீவு - கோடாலிக்கல்லு குளத்தின் அணைபகுதி ஏற்கனவே உடைந்துள்ளதால், இரவு 9.30 மணிப்படி, பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழையினால் அப்பகுதியில் பெருமளவு நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோடாலிக்கல்லு முன்புறத்தில் உள்ள முள்ளியவளை – நெடுங்கேணி வீதி நீரில் மூழ்கியுள்ளது.
எனவே, இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் முக்கியமாக இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகள் இருப்பின், முள்ளியவளை - ஒட்டிசுட்டான் - நெடுங்கேணி வீதியை பயன்படுத்தவும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
அதெவேளை, வவுனியா வடக்கு பகுதியில் தற்போது மிக அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றிரவு மேலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், குருவிச்சை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் உருவாகும் அபாயம் நிலவுகிறது.
எனவே பண்டாரவன்னி பகுதியில் வசிக்கும் மக்கள் நிலைமையை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். வெள்ளம் அபாய மட்டத்திற்கு உயர்ந்தால், தயவுசெய்து உடனடியாக கருவேலன்கண்டல் பாடசாலைக்கு பாதுகாப்பாக இடம்பெயருங்கள் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் பிரிவு, மாவட்ட செயலகம் தெரிவித்தது.

தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri