யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில்
எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் பங்கீட்டு அட்டை
அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்த திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச
திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு
மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam