பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய,முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri