மின்சக்தி அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான இரண்டு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு எதிராக செயற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது ஒரு முற்போக்கான பிரேரணை எனவும், அதற்கான முன்மொழிவுகள் 06 வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, இதற்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
I have done the hard part. Brought 2 amendments on reforms. SJB voted against both. CEB restructuring is progressing & will be presented within 6 weeks. And it’s the other way around, u should ask SJB to vote for it when it’s presented rather than thinking of the next election!
— Kanchana Wijesekera (@kanchana_wij) December 11, 2022