லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நாளை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாகவும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 8,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
