சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர் 6 மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 26ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸைப் பெற்ற பிறகு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாதவர்கள், இரண்டாவது டோஸை பெற்று மூன்று மாதங்களுக்குப் பின் மூன்றாவது டோஸைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri