இலங்கையர்கள் 8 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நீர் கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய, அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்
8,000 மில்லியன் ரூபாய் வரை காணப்பட்ட நிலுவை தொகை, 4000 மில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்ட போதும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் 6,000 மில்லியன் ரூபாய் கட்டணம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கிணங்க, 60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறிய அனைத்து பயனார்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுமார் 8 இலட்சம் பாவனையாளர்கள் 90 நாட்கள் அல்லது அதற்கும் அதிக நாட்கள், நீர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
