பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகள் சமூகத்திற்கு வெளிப்படும் போது கோவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
"தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட் தொற்று அறிகுறிகள் தென்பட்டாலோ, அல்லது வீட்டில் எவருக்காவது தொற்று அறிகுறிகள் இருந்தாலோ, தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடசாலை நேரங்களில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா பணியாளர்களுக்கு நாம் அறிவித்துள்ளோம்.
எனவே, நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களை பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பெற்றோர்களும் முழுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, பொறுப்புடன் செயல்பட்டால், பாடசாலைகளை தொடர்ந்து நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகன் ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! சென்சார் போர்டு, பாஜகவுக்கு எதிராக பதிவு Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri